×

சார்பதிவாளர் அலுவலகம் மீண்டும் திறப்பு மக்கள் வராமல் வெறிச்சோடியது

திருப்போரூர்: அரசின் உத்தரவை தொடர்ந்து திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டு அலுவலர்கள் வந்தனர். ஆனால், மக்கள் வராததால், வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும், மூடப்பட்டுள்ளன. சில தனியார் நிறுவன ஊழியர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்கின்றனர். இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து ஆவணங்களை பதிவு செய்ய தமிழக அரசு விதிவிலக்கு அளித்தது.மேலும், குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படுதல், முக கவசம், கையுறை, கிருமி நாசினி தெளிப்பு ஆகிய பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்தல், ஒரு நாளைக்கு 24 ஆவணங்கள் மட்டும் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படட்து.

இதைத்தொடர்ந்து திருப்போரூர் சார்பதிவலகம் நேற்று காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்டு சார்பதிவாளர், தலைமை எழுத்தர், அலுவலக உதவியாளர் மட்டும் பணிக்கு வந்தனர். பொது மக்கள் வருவார்கள் என எண்ணி, அவர்களுக்கு கை கழுவும் வகையில் அலுவலகத்தின் வெளியே தண்ணீர் வைத்து, கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. ஆனால், பதிவு செய்யும் வகையில் ஒரு டோக்கன் கூட புக்கிங் ஆகவில்லை.

Tags : reopening ,Office ,Representative , reopening , Office,Representative, frowned upon
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...