×

குறைந்த செலவில் கச்சிதமான வென்டிலேட்டர் சென்னை இளம் பொறியாளர் சாதனை: மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைக்க கோரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் சாதனமான வென்டிலேட்டர்களை குறைந்த செலவில் கச்சிதமாக பொருத்தக்கூடிய அளவில் வடிவமைத்து சென்னையை சேர்ந்த இளம் பொறியாளர் சாதனை படைத்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ ஆராய்ச்சிகள், மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் பணிகளில் இளைஞர்களும், தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் சக்கரவர்த்தி என்ற 24 வயது மெக்கானிக்கல் இன்ஜினியர் சிறிய மற்றும் சரியான அளவில் நோயாளிகளுக்கு பொருத்தக்கூடிய  குறைந்த செலவிலான வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த வென்டிலேட்டரை பயன்படுத்த முடியும். அபிலாஷ் தனது குழுவினருடன் இணைந்து தங்களிடம் கிடைத்த உபகரணங்களை கொண்டு இந்த வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளார். மத்திய மாநில அரசுகளின் அனுமதி மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அனுமதி கிடைத்துவிட்டால் ஓரிரு நாளில் வென்டிலேட்டர்களை தயாரிக்கவும், வணிக ரீதியாக விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அபிலாஷ் கூறுகையில், ‘‘இந்த வென்டிலேட்டர் தானியங்கி பம்பிங் சிஸ்டம் முறையில் இயங்கக்கூடியது. நோயாளிக்கு பொருத்திவிட்டால் யாரும் பம்பிங் செய்ய தேவையில்லை. வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வென்டிலேட்டர்களின் விலையை விட இந்த வென்டிலேட்டர்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். உயிர் காக்கும் இந்த வென்டிலேட்டரை தயாரிக்க உரிய இடவசதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்கான வசதி ஆகியவற்றை அரசு செய்த தரவேண்டும். வென்டிலேட்டர் தயாரிப்பிற்கான சாதனங்களை கொண்டுவரவும், தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் உரிய அனுமதி தரவேண்டும். அதிவேக உற்பத்தி சோதனை மற்றும் ஒற்றைச்சாளர முறையில் வென்டிலேட்டர் தயாரிப்புக்கு அனுமதி தர வேண்டும். உரிய அனுமதிகளை தரும்பட்சத்தில் தேவையான வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்க முடியும்,’’ என்றார்.

Tags : State ,Governments ,Central ,Ventilator , Chennai Young Engineer, Achievement, Low Cost Perfect Ventilator
× RELATED தமிழில் அறிவிப்பு உள்ளிட்ட வழக்குகள்...