×

கர்நாடகாவிலிருந்து நடந்தே அந்தியூர் வந்த 12 சிற்ப கலைஞர்கள்: சொந்த ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்

அந்தியூர்: டெல்டா மாவட்டங்களை சேர்ந்த   சிற்ப கலைஞர்கள் 12 பேர்  கர்நாடகாவிலிருந்து நடந்தே அந்தியூர் வந்து   சேர்ந்தனர். அவர்களை போலீசார் மீட்டு வாகனத்தில், சொந்த ஊருக்கு  அனுப்பி  வைத்தனர். தஞ்சாவூர், நாகப்பட்டினம்,  திருவாரூர்  மாவட்டங்களை  சேர்ந்த கோயில் சிற்ப கலைஞர்கள் 12 பேர் வேலைக்காக கர்நாடக  மாநிலம்  மாண்டியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றிருந்தனர். அங்குதங்கி வேலை செய்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததும் உணவு வசதியின்றி அவதிப்பட்டனர். இதனால் 12 பேரும் சொந்த  ஊருக்கு  எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்து சில  நாட்களுக்கு முன்பு  அங்கிருந்து நடந்தே புறப்பட்டனர்.

பல மைல் தூரம்  நடந்தும், சில இடங்களில் வாகன உதவியுடனும் கடந்த 16ம் தேதி தமிழக  எல்லையான அந்தியூர் அருகே  கர்கேகண்டி சோதனைச்சாவடிக்கு வந்து  சேர்ந்தனர். அங்கு பணியிலிருந்த  போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி மாவட்ட  நிர்வாகத்திற்கு தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் நோய்த்  தொற்று இல்லை என சான்றளித்ததும், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு  அழைத்து வந்தனர். அங்கிருந்து, சொந்த ஊர்களுக்கு  காவல்துறை வாகனத்திலேயே போலீசார் அனுப்பி   வைத்தனர்.

சென்னையில் இருந்து பைக்கில் பயணித்த 2 ஐடி ஊழியர்கள்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் விபின்(22), ரெதீஸ்(27). நண்பர்களான இருவரும் சென்ைன, அசோக்நகரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக ேநற்றுமுன்தினம் மாலை ரெதீஸின் பைக்கில் ஊருக்கு புறப்பட்டனர். நேற்று காலை ஆரல்வாய்மொழி சோதனை சாவடிக்கு வந்தபோது போலீசார் தடுத்து விசாரித்தனர். சோதனைக்குப்பின் இருவரிடமும் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags : Nandan Antheyoor ,hometown ,Artisans ,Karnataka ,sculptors , Nandan Antheyoor's,sculptors , Karnataka, Police dispatched to their hometown
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில்...