×

பொருளாதார மந்தம், கொரோனாவால் வெளியேறும் அந்நிய முதலீடுகள் மதிப்பிழக்கும் இந்திய ரூபாய்

* கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆண்டுகளில்தான் அதிகபட்சமாக அந்நிய முதலீடு பங்குச்சந்தையில் இருந்து வெளியேறியது. 2016ல் ₹23,090 கோடியும், 2018ல் ₹80,919 கோடியும் வெளியேறியுள்ளது.
* நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 85,558 கோடியை வாபஸ் பெற்றுள்ளனர்.
* மார்ச் மாதத்தில் மட்டும் ரூபாய் மதிப்பு 73 முதல் 76 வரை இருந்தது. இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களிலேயே அதிகபட்ச சரிவாக 76.15 ஆகிவிட்டது.
* கடந்த மார்ச் முதல் வாரத்தில் 48,723 கோடி டாலராக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 48,189 கோடி டாலராக குறைந்து விட்டது.
* கொரோனா பாதிப்பால் அரசுக்கு நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு மேலும் சரியும் ஆபத்து உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலும் கடந்த 2 ஆண்டுகளாகவே டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு 70 என்ற அளவிலேயே நீடிக்கிறது. டாலரில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்போது, முதலீட்டை பெறும் நாட்டின் கரன்சி மதிப்பு உயர்கிறது. வெளியேறும்போது, நாட்டின் கரன்சி மதிப்பு குறைந்து விடுகிறது. ஆனால், சமீபகாலமாக மேற்கண்ட முதலீடு மற்றும் வெளியேற்றம் நிலையாக இல்லை. பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. பங்கு மதிப்புகள் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலையால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து முதலீட்டை வெளியேற்றிய வண்ணம் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் கடன்பத்திரங்களில் முதலீடுகள் அதிகரித்து வந்ததால், சாதகமான சூழ்நிலை நிலவியது.  ஆனால் கடந்த 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில்தான் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடுகளை வாபஸ் பெறுவது அதிகரித்தது. அதாவது, 2016ல் 23,090 கோடியும், 2018ல் 80,919 கோடியும் வெளியேறியுள்ளது. அதிலும், இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்பட்டதில் இருந்து நிலைமை படு மோசமாகி விட்டது. நடப்பு 2020ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ₹85,558 கோடியை வாபஸ் பெற்றுள்ளனர். இது ரூபாய் மதிப்பின் கடும் சரிவுக்கு காரணம் ஆகி விட்டது.

71 முதல் 72க்குள் இருந்த ரூபாய் மதிப்பு, அதல பாதாளத்தில் சரிந்து, அதிகபட்ச சரிவாக 77.87 ஆக இருந்தது. ஏறக்குறைய 77 என்ற அளவை நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம். மார்ச் மாதத்தில் மட்டும் ரூபாய் மதிப்பு 73 முதல் 76 வரை இருந்தது. இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களிலேயே அதிகபட்ச சரிவாக 76.15 ஆகிவிட்டது.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும் ரூபாய் மதிப்பு சரிய மற்றொரு காரணம். கடந்த 5 ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு 13,000 கோடி டாலர் சேர்க்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் முதல் வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 48,723 கோடி டாலராக இருந்தது. ஆனால் மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு 48,189 க குறைந்து விட்டது.

நடப்பு 2020ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 85,558 கோடியை வாபஸ் பெற்றதே இதற்கு முக்கிய காரணம். நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி அறிவிப்பால் ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்து 76.39 ஆக இருந்தது. இருப்பினும், இது, மதிப்பு சரியவே வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர். வெள்ளிக்கிழமை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வர்த்தக முடிவில் 76.40 ஆக இருந்தது. அதோடு, மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.5 சதவீதத்துக்குள் வைக்க ரிசர்வ் வங்கியில் இருந்து நிதி பெற முடிவு செய்ததும் மற்றொரு காரணம். தற்போதைய சூழ்நிலையில், கொரோனா காரணமாக பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்பதால், அரசு மேலும் கடன் வாங்க வேண்டிவரும். இதனால், ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையும் ஆபத்துகள் உள்ளன என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

Tags : recession ,Corona ,Indian , Economic Depression, Corona,, Foreign Investment, Indian Rupee
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...