×

நிவாரண உதவி வழங்க தடையில்லை என்ற நீதிமன்ற உத்தரவு திமுகவின் வெற்றி: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் நிவாரண உதவி வழங்க தடையில்லை என்ற நீதிமன்ற உத்தரவு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என தயாநிதி மாறன் எம்பி கூறினார். ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை ஓரத்தில், வறுமையில் தவிக்கும் 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு 21 வகையான மளிகை பொருள், காய்கறி, ரொட்டி, சோப், பவுடர், பேஸ்ட், பிரஸ், கிருமி நாசினி, முகக்கவசம், உதவித்தொகை உள்ளிட்டவற்றை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று வழங்கினார். உடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு இருந்தார். பின்னர், தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர்.

இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க கூடாது என தமிழக அரசு தடை விதித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதால் திமுகவினருக்கு நல்ல  பெயர் கிடைத்துவிடுமோ என்ற எண்ணத்தில் அதிமுக அரசு இதை செய்துள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவி வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இது, திமுகவுக்கு கிடைத்த வெற்றி. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மீண்டும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Tags : triumph ,Dayanidhi Maran ,DMK , DMK's triumph , interim injunction,Dayanidhi Maran
× RELATED வரிப்பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் : தயாநிதி மாறன் சாடல்