×

கர்னூலில் கொரோனாவால் இறந்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு பரிசோதனை: தானாக முன்வர கலெக்டர் வேண்டுகோள்

திருமலை: ஆந்திர மாநிலம், கர்னூலில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருந்தவர் 80 வயதான மூத்த பிரபல மருத்துவர். இவர் பழம்பெரும் மருத்துவர் என்பதால் அவரிடம் கர்னூல் மட்டுமின்றி தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆலம்பூர், கேத்வால்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சுவாச பிரச்னை ஏற்பட்டதால் அவர் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதில் ரத்த பரிசோதனையின் முடிவு நேற்று வந்தது.

அதில் கொரோனா தொற்றின் காரணமாகவே அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், இவரிடம் யார்? யார்? சிகிச்சை பெற்றார்கள் என்று தெரியாத நிலையில் உயிரிழந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : doctors ,coroner ,death ,Kurnool Kurnool ,examination , Karnur, Corona, Precedent Collector
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...