×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 207 மருந்து கடைகளில் டோர் டெலிவரி வசதி

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 207 மருந்து கடைகளில் டோர் டெலிவரி வசதி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு வரும் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் காய்கறி, மளிகை, இறைச்சி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட கடைகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மருந்து கடைகள் மட்டும் வழக்கம் போல திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருந்து கடைகளில் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்பட பல நோய்களுக்கு மருந்து, மாத்திரை வாங்க பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதன் காரணமாக சில மருந்துகடைகளில் சமூக விலகல் கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மருந்து கடைகளில் எத்தனை கடைகளில் டோர் டெலிவரி வசதி உள்ளது என்று கணக்கெடுத்து, அதுகுறித்த அறிக்கையை மருந்துகள் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மருந்துகள் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி வேலூர் மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் 207 கடைகளில் டோர் டெலிவரி வசதி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று மருந்து, மாத்திரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Tags : drug stores ,delivery facility ,Ranipet ,Door ,Tirupathur ,Vellore , Vellore, Tirupattur, Ranipet, Drug Store, Door Delivery
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் பாதிரியார் கைது