×

வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை தாயகம் அழைத்து வர முடியாது; பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடும்...சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்

சென்னை: வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை தாயகம் அழைத்து வந்தால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளும் தீவிரமான நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா, பல்வேறு பயணங்களுக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பாக வக்கீல் ஞானசேகர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மலேசியாவில் சிக்கிய 350-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட போது, இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அறிக்கை அளிக்கும் படி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சில விவரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலாக அளிக்கப்பட்டது.

அதில், தற்போது இருக்கிற சூழ்நிலையில் இந்தியா இரண்டாவது முறையாக ஊரடங்கு கடைபிடித்து வருகிறது. இதில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வெளிநாடுகளில் இருந்து மக்களை கொண்டு வருவது என்பது மிக பெரிய ஆபத்தை உருவாக்கும், அதனால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் மிக பெரிய அச்சறுத்தலாக இருக்கும். இந்நிலையில் இந்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Indians ,home ,government ,Chennai Icorte ,Chennai Icart , Indians, Madras Icord, Central Government
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...