×

பல்வேறு நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் சர்வதேச அரங்கில் உயர்ந்து வரும் இந்தியாவின் மதிப்பீடு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ இந்தியா 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் உலக அரங்கில் இந்தியா தனது ராஜீய உறவுகளை வலுப்படுத்தி உள்ளது.  கடந்த 2 வாரங்களில் சுமார் 8.5 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளும், 50 கோடி பாரசிட்டமால் மாத்திரைகளும் 108 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விமானப்படையின் சிறப்பு விமானங்கள், வெளிநாட்டவரை மீட்கவரும் விமானங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மொரீஷியஸ் மற்றும் சீஷல்ஸ் நாடுகளுக்கு விமானப்படை விமானத்தில் நேற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இந்தியாவின்அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மலேரியாவிற்கு எதிரான இந்த மருந்து கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது. இந்தியா மிக அதிக அளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் இந்தியாவிடம் இருந்து பல்வேறு நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய கோரிக்கை வைத்து வருகிறது. அமெரிக்கா அதிபர் டிரம்பும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை கேட்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்து ஏற்றுமதி செய்து கொரோனா தடுப்புக்கு உதவியுள்ளது. இதனையடுத்து உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : India ,arena ,countries , India, Pharmaceutical, Export, Assessment
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...