×

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் : தமிழக உயர்க்கல்வி துறை அறிவிப்பு

சென்னை: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் என்று தமிழக உயர்க்கல்வி துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் ஊரடங்கு 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட பின்பும் இந்த விடுமுறையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள், வழக்கமாய் மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியவுடன் நடைபெறும் என்று தமிழக உயர்க்கல்வி துறை அதிகாரப் பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏனென்றால் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த மார்ச் மாதம் முதல் விடுமுறையானது நீடித்து வருகிறது, மேலும் மே 3ம் தேதி வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும், அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறித்து சில முடிவுகளை எடுக்கப்படும் என்று யுஜிசி தெரிவித்தது.

இந்த டிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மே மாதத்துடன் முடிவடைவதன் காரணமாக ஜூனில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய வுடன் நடப்பு கல்வி ஆண்டுக்காக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒவ்வொன்றாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த மாணவர்கள், அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தேர்வுகள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு (2020-21)-க்கான அத்தனை செமஸ்டர் தேர்வுகளும் மற்றும் ARRIER தேர்வுகளும் சேர்த்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Semester Examination ,Colleges ,Universities ,Announcement ,Department of Higher Education ,Tamil Nadu , Curfew, Colleges, Semester Examination, Department of Higher Education, Announcement
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...