×

320 லிட். கள்ளச்சாராயம் மூணாறு அருகே சிக்கியது

மூணாறு:  மூணாறு அருகே விற்பனைக்காக பதுக்கி  வைக்கப்பட்டிருந்த 320 லிட்டர் கள்ளச் சாராயத்தை அதிகாரிகள் பறிமுதல் செயத்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கள்ளச்சாராய விற்பனை மும்முரமாகி உள்ளது. இரண்டு வாரங்களில் 5,060 லிட்டர் கள்ளச்சாராயத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் மூணாறு அருகே பைசன்வாலி  அஞ்சுகடை பகுதியில் உள்ள தோட்டத்தில் கள்ளச்சாராயம்  விற்பதாக உடும்பன்சோலை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை ஆய்வாளர் செபாஸ்டின் ஜோசப் தலைமையில் அதிகாரிகள் சதீஷ்குமார், சசீந்திரன், ஓமரையா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 320 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். சாராயத்தை பதுக்கிய தோட்ட உரிமையாளர் அஜேந்திரன் தலைமறைவாகிவிட்டார். வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.



Tags : Counterfeit ,Munnar. 320 Lit ,Munnar , 320 Lit, Counterfeit trapped , Munnar
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு