×

அந்த நாள் ஞாபகம்... 56 பந்தில் டெஸ்ட் சதம் அடித்து நொறுக்கிய ரிச்சர்ட்ஸ்!

டெஸ்ட் போட்டியில் பேட்டிங் என்றாலே மணிக் கணக்கில் டொக்கு வைத்து நங்கூரம் பாய்ச்சி நிற்பது என்ற கான்செப்டை உடைத்தவர்களில் முன்னோடி என்றால் அது வெஸ்ட் இண்டீசின் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் தான். ஆன்டிகுவா, செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில் 1986ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்டில், ரிச்சர்ட்ஸ் 56 பந்தில் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதமாக உலக சாதனை படைத்த இந்த ஆட்டம் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு நிலைத்து நின்றது. 2016ல் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் இந்த சாதனையை முறியடித்தார்.

தனது அதிரடியான ஆட்டத்தால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ரிச்சர்ட்ஸ் 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8540 ரன் குவித்துள்ளார் (சராசரி 50.20, அதிகம் 291, சதம் 24, அரை சதம் 45). சூயிங்கம் மென்றபடியே கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பவுண்டரியும், சிக்சருமாக விளாசித் தள்ளும்  இவர் 187 ஒருநாள் போட்டிகளில் 6721 ரன் குவித்துள்ளார் (சராசரி 47.00, அதிகம் 189*, சதம் 11, அரை சதம் 45). ரிச்சர்ட்சின் அதிவேக டெஸ்ட் சதத்தை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று நினைவுகூர்ந்து கவுரவித்துள்ளது.


Tags : Richards , Test century, Richards
× RELATED பாஜக எம்.எல்.ஏக்கள் நில அபகரிப்பு...