போலி பணி நியமன ஆணை வழங்கிய சிறப்பு ஆர்ஐ சஸ்பெண்ட்

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்துக்கான சிறப்பு தாசில்தார் அலுவலக சிறப்பு வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன். இவர் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பதிவு எழுத்தர் ஆகிய பணிகளுக்கு போலி பணி நியமன உத்தரவுகளை வழங்கியதாக புகார் கூறப்பட்டது. துறைரீதியான விசாரணையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும், போலியாக அரசு பணி நியமன உத்தரவுகளை வழங்கி ஆட்களை நியமித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு ஆர்ஐ ராஜசேகரனை சஸ்பெண்ட் செய்து ராணிப்பேட்டை டிஆர்ஓ ஜெயசந்திரன் உத்தரவிட்டார். உயரதிகாரிகள் அனுமதியில்லாமல்  அரக்கோணம் நகரை விட்டு வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>