×

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த கேரளாவில் தயார் நிலையில் 2.50 லட்சம் அறைகள்

திருவனந்தபுரம்,: தங்களது நாடுகளில் உள்ள வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் உடனடியாக  அழைத்து செல்ல வேண்டும் என ஐக்கிய அரபு குடியரசு ெதரிவித்துள்ளதாக தகவல்  பரவியுள்ளது. இதனால் அந்த நாடுகளில் இருந்து கேரள மாநிலத்தினர் அழைத்து வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படி வெளிநாடுகளில்  இருந்து கேரளா வருபவர்களை தனிப்படுத்துவதற்காக, அரசு கட்டிடங்கள், பள்ளி, கல்லூரி  விடுதிகள், ஓட்டல்கள், ஆட்கள் வசிக்காமல் காலியாக உள்ள வீடுகள், படகு  இல்லங்கள் என மாநிலம் முழுவதும் 2.50 லட்சம் அறைகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 1.25 லட்சம் அறைகள் உள்ளன. இதற்கிடையே, கேரளாவில நேற்று 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

நோயாளிகளுக்கு சிறப்பு உணவு: கேரளாவில் உள்ளூர், வெளிநாட்டு  நோயாளிகளுக்கு என்று 2 விதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. உள்ளூர் நோயாளிகளுக்கு காலை 7.30க்கு தோசை, சாம்பார், 2 அவித்த முட்டைகள், 2  ஆரஞ்சுகள், ஒரு கப் டீ, ஒரு லிட்டர் தண்ணீர், 10:30 அளவில் பழச்சாறு  வழங்கப்படுகிறது. மதிய உணவாக 12 மணிக்கு 2 சப்பாத்தி, சாதம், மீன் வறுவல்,  தோரன் (பொரியல்), குழம்பு, தயிர், ஒரு லிட்டர் தண்ணீர் என்று பாரம்பரிய  உணவுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல பிற்பகல் 3:30 மணிக்கு டீயுடன்  பிஸ்கட்டுகள், பழம் ,பொரி அல்லது வடை வழங்கப்படுகிறது.

7 மணிக்கு இரவு  உணவில் அப்பம், காய்கறி கூட்டு, 2 வாழைப்பழங்கள், ஒரு லிட்டர் தண்ணீர்  வழங்கப்படுகிறது வெளிநாட்டினருக்கு  காலை உணவாக சூப், பழங்கள் (பச்சை வெள்ளரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம்), 2  அவித்த முட்டைகள், 11 மணி அளவில் அன்னாசிப்பழச்சாறு, நண்பகல் 12  மணியளவில் டோஸ்ட் செய்த ப்ரட், தேவைப்பட்டால் சீஸ், பழங்கள், 4 மணிக்கு  மீண்டும் பழச்சாறு, இரவு உணவாக டோஸ்டட் ப்ரெட், ஸ்க்ராம்ப்ள்ட் எக்,  பழங்கள், குழந்தைகளுக்கு பால் ஆகியவை வழங்கப்படுகின்றன.

பக்தர்கள் இன்றி விஷூ
சபரிமலை கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு விஷூ கணி தரிசனம் நடந்தது. தடை உத்தரவு காரணமாக நேற்று கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. நடை திறந்த உடன் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோயில் ஊழியர்கள், போலீசாருக்கு விஷூ கைநீட்டம் வழங்கினார்.

மின்வாரியம் ேகாரும் ஆவணங்களில் தேசிய மக்கள்தொகை பதிவேடு
கேரளாவில் மக்கள் தொகை பதிவேடு அமல்டுத்தப்படாது என்று முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ள நிலையில் கேரள மின்வாரியத்தில் புதிய இணைப்பு பெறுவதற்கு சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு அட்டையும் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரையின்படியே இது சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : rooms ,Kerala ,overseas , United Arab Emirates, Kerala, Corona
× RELATED வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற...