×

சானிட்டைசரில் மது கலந்து லிட்டர் 1600க்கு விற்பனை: போலி சமூக சேவகர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே வர்க்கலாவில் நேற்று முன்தினம் ேபாலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்துள்ளார். மதுகடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எங்கிருந்து மது கிடைத்தது என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மது வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது வர்க்கலா பகுதியை ேசர்ந்த சஜின்(37) என்பவர் மது விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பகீர் தகவல் வெளிவந்தது. சஜின் மருந்து கடைகளில் இருந்து சானிட்டைசரை வாங்கி அதில் ஒயிட்ரம், ஓட்கா உள்ளிட்ட வெளிநாட்டு வகை மதுக்களை கலந்து விற்பனை செய்துள்ளார். இவ்வாறு தயாரித்ததை ஒரு லிட்டர் பாட்டில் ரூ.1600க்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவர் சமூக சேவகர் அடையாள அட்டையை பயன்படுத்தி சர்வசாதாரணமாக வெளியே சென்று வந்துள்ளார். போலீசார் இவரை தடுத்து நிறுத்தும்போது அந்த அட்டையை காண்பித்து தப்பியுள்ளார். ேமலும் வீடியோ கிராபர் சங்கத்தின் அடையாள அட்டையும் வைத்திருந்ததால் எளிதாக வெளியே சென்று வந்துள்ளார்.


Tags : social worker , Sanitizer, alcohol, fake social worker, arrested
× RELATED பிரதமர் மோடியின் மனதை கவர்ந்த சமூக...