×

ஊரடங்கால் பறிக்க ஆட்கள் கிடைக்கவில்லை: மரங்களிலேயே அழுகி வீணாகும் அல்போன்சா மாம்பழங்கள்

சிவகங்கை: காளையார்கோவில் அருகே ஊரடங்கால் பறிக்க ஆட்கள் கிடைக்காததால் அல்போன்சா மாம்பழங்கள் மரத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதூர், சிங்கம்புணரி, காரைக்குடி, காளையார்கோவில், திருப்புத்தூர், திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஆயிரக்கணக்கான மாமரங்கள் வளர்க்கப்படுகின்றன. மார்ச் இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கிவிடும். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25லிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் விவசாய பணிக்கு ஆட்கள் வருவது, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை விற்பனைக்கு உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காளையார்கோவில் அருகே கருங்குளத்தில் 300 ஏக்கரில் உயர்தர அல்போன்சா மாமரம் நடவு செய்து வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் நடவு செய்ததில் இருந்து 5 ஆண்டுகளுக்குப்பின் காய்க்க தொடங்கிவிடும். 15ஆண்டுகளுக்கு முன் நடவு செய்யப்பட்ட இம்மரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக விளைச்சல் கொடுத்து வருகின்றன.

இங்கு விளையும் பழங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது சீசன் தொடங்கியுள்ள நேரத்தில், ஊரடங்கால் காய் மற்றும் பழங்களை மரத்தில் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பறித்த பழங்களையும் வாகனங்கள் மூலம் ஏற்றிக்கொண்டு செல்ல முடியவில்லை. இரண்டு வாரங்களாக பறிக்க வேண்டிய பழங்கள் மரத்திலேயே அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Curfew, rotting waste, alfonsa mangoes
× RELATED ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த...