×

இருளர் குடும்பங்களுக்கு காய்கறி, மளிகை பொருள்

ஊத்துக்கோட்டை: பென்னலூர்பேட்டை ஊராட்சியில்  இருளர் இன மக்கள் ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.  இதையறிந்த, பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா 82 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். இதேபோல், ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் ஜெ.ஜெ நகர் இருளர் காலனி பகுதி மக்கள் 700 குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் பேரவை சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார்.

ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தனஞ்செழியன்,  ரமேஷ் வெங்கட்ராமன், சுபாகரன், ரவி முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஊராட்சி தலைவர் நாகன் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், எஸ்.ஐ ராக்கிகுமாரி ஆகியோர் 700 இருளர் இன மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினர். பின்னர், காஞ்சி சரக டிஐஜி தேன்மொழி சார்பில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் எஸ்.ஐ. ராக்கி குமாரி ஆகியோர் அங்குள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பிஸ்கட் வாட்டர் பாட்டில்கள் வழங்கினர்.

Tags : families , Vegetable, groceries , families
× RELATED தார்ச்சாலை அமைக்க கோரிக்கை