×

கொரோனாவால் திருமணத்தை தள்ளிவைத்த நடிகை

சென்னை: டான்ஸ் மாஸ்டர்கள் லலிதா, மணி தம்பதியரின் மகன் ராகுல் ஹீரோவாக நடித்த படம், வவ்வால் பசங்க. இதில் அவரது ஜோடியாக நடித்தவர் உத்ரா உன்னி. இவர், ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் சோனியா அகர்வாலுக்கு அம்மாவாக நடித்த ஊர்மிளா உன்னியின் மகள். தற்போது கேரளாவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். ஓரிரு மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கும், நிதேஷ் நாயர் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இம்மாதம் அவர்கள் திருமணம் நடக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உத்ரா உன்னியின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் அவரது திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.


Tags : actress ,wedding ,Corona , Corona, married, actress Udra Unni
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...