×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது?.. விதிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை

சென்னை: கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் முறையை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறைபலவேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் விதிமுறைகளை அரசு வெளிடியிட்டது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் முறையை சுகாதாரத்துறை வெளியிட்டது.

* இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையால் சுற்றி, பை மீது கிருமி நாசினி தெளிக்க வேண்டும்

* இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் சர்ஜிக்கல் மாஸ்க், கையுறைகளை அணிய வேண்டும்

* இறந்தவரின் உடலை உறவினர்களை பார்க்க விடாமல் முகத்தை மட்டும் காட்ட வேண்டும்

* பணியாளர் தவிர வேறு யாரும் இறந்தவரை தொடக்கூடாது

* இறந்தவர்களின் உடலை தொடராமல் மத சம்மந்தமான சடங்குகளை செய்ய அனுமதி

* இறந்தவரின் உடலை குளிப்பாட்டுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதலுக்கு அனுமதியில்லை.

*இறந்தவரின் தகன சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம்; அதில் எந்த ஆபத்தில்லை

*தகனம்/ அடக்கம் நடைபெறும் இடத்தில் குறைந்த அளவில் உறவினர்களை அனுமதிக்கலாம்.

*உறவினர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags : coroners , Corona, Regulation, Department of Health
× RELATED சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்...