×

கொரோனா பாதிப்பால் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் ஒத்திவைத்தாலும் ஓட்டப்பயிற்சியை விடாத வாலிபர்கள்

வேலூர்: கொரோனா பாதிப்பால் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஒத்திவைத்தாலும் வேலூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் வாலிபர்கள் ஆர்வத்துடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருந்தது. இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் ராணுவத்தில் அதிகளவில் பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டத்தில், அதன் மீதான பற்றுக்காரணமாக தற்போதும் அதிகளவில் வாலிபர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் வாலிபர்கள் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஒத்திவைத்தாலும் ஓட்டப்பயிற்சியை, கைவிடாமல் தற்போதும் தினமும் காலையில் சமூக இடைவெளிவிட்டு தங்களது ஓட்டப்பயிற்சியை தொடர்ந்தனர்.



Tags : Coroners ,recruiting camp ,damage Coroners ,Army ,army recruiting camp , Coroners ,postponed , army ,recruiting camp
× RELATED மாமல்லபுரத்தில் வியாபாரிகளுக்கு...