×

டாக்டருக்கு கொரோனா தொற்று எதிரொலி நாகையில் 5 கி.மீ சுற்றளவுக்கு சீல்

நாகை: நாகையில் ஓய்வுபெற்ற அரசு டாக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வசித்த பகுதியை சுற்றி 5கி.மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோ னா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று நாகை திரும்பிய 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நாகை காடம்பாடி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு டாக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் முதல் கட்டமாக அவரது கிளினிக் சீல் வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக டாக்டரிடம் சிகிச்சை பெற வந்தவர்கள் யார் யார் என்பது குறித்து சுகாதாரத்துறையினர் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மூன்றாம் கட்டமாக ஓய்வுபெற்ற டாக்டர் வசித்த வீட்டை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தகரம் மற்றும் தடுப்பு கட்டைகள் கட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதி பொதுமக்கள் வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ள பகுதியாகவும் அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற அரசு டாக்டர் வீடு அருகில், எஸ்பி முகாம் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்களின் முகாம் அலுவலகங்கள் இருப்பதால் அவர்கள் வந்து செல்வதற்காக வசதியாக இரும்பிலான தடுப்புகள் போட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Naga ,doctor , Coronal, doctor, Naga
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா