×

கருங்குழி பேரூராட்சியில் கிருமி நாசினி தெளிப்பான் பாதை

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில், கிருமி நாசினி தெளிப்பான் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால், பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர். சில அரசு அலுவலகங்களுக்கு செல்லும் மக்களுக்கு, நுழைவாயிலில் சோப் போட்டு கை கழிவு கொண்டு, சானிடைசர் மூலம் கையை நனைக்க வேண்டும் என வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருங்குழி பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிருமி நாசினி தெளிப்பான் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதை நேற்று முன்தினம் மாலை பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

இதனை மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமிபிரியா,  கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் ஆகியோர் பார்வையிட்டனர். இதையொட்டி, பேரூராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் இந்த பாதையை கடக்கும்போது, கிருமி நாசினி அவர்கள் மீது தெளிக்கப்படும். அதன் பிறகே அவர்கள், அலுவலகத்தின் உள்ளே செல்வார்கள். இதனால், நோய் தொற்று பாதிப்பில் இருந்து, முழு பாதுகாப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Antiseptic,sprayer pathway,gastrointestinal,tract
× RELATED பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி...