×

கொரோனா ஒழிப்பில் முன்னின்று செயல்படும் டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அதற்கான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும் என்ற அரசின் ஆணையை எதிர்த்தும், இலவச சிகிச்சை வழங்கக் கோரியும்  ஐகோர்ட்டில் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் முன்னணியில் நின்று பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், நோய் தடுப்பு சாதனங்களை அரசு வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில் இவர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பணிக்கு உரிய சம்பளம் தரப்படவில்லை என்று கருதப்படுகிறது.  எனவே, உன்னதமான இந்த பணியில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட உயிர்காக்கும் பணியில் உள்ளவர்களை பாராட்டும் விதமாக அவர்களின் ஊதியத்தை தமிழக அரசு அதிகரிக்கும் என்று நீதிமன்றம் நம்பிக்கை தெரிவிக்கிறது. வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : doctors ,coroners ,State , Corona, doctors, government, HC
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...