×

ரேஷன் கடைகளில் 19 வகை மளிகை பொருள் 500 ரூபாய்க்கு விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, நியாய விலை கடைகளில் 500க்கு 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கூட்டறவு சங்கங்களில் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பிறப்பித்து ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்து அதன் மூலம் மளிகை பொருட்களின் தட்டுபாடு மற்றும் விலை ஏற்றம் ஏற்படும்  காரணத்தினால், வருமான இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 500 விலையிலான மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டி.யு.சி.எஸ் நிறுவனத்தின் மூலம் மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு இணைப்பில் கண்டவாறு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.  இவ்வாறு கூட்டுறவுச் சங்கங்களில் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

19 வகை பொருட்களின் விலை பட்டியல்
விவரம்    அளவு    விலை    வெளிசந்தை விலை
துவரம்பருப்பு    1/2கிலோ                     57.50    65
உளுந்தம்பருப்பு    1/2 கிலோ    64.70    75
கடலைப்பருப்பு    1/4 கிலோ    22    27
மிளகு                      100 கிராம்    42.70    50
சீரகம்                      100 கிராம்    25.60    30
கடுகு                      100 கிராம்    9    12
வெந்தயம்    100 கிராம்    8.60    11
தோசை புளி    250 கிராம்    35.50    42
ெபாட்டு கடலை    250 கிராம்    22    25
நீட்டு மிளகாய்    150 கிராம்    25.50    30
தனியா                      200 கிராம்    24    30
மஞ்சள் தூள்    100 கிராம்    12.90    16
டீ தூள்                      100 கிராம்    24    28       
உப்பு                      1 கிலோ                      8    10
பூண்டு                      250 கிராம்                 50    70
ேகால்டு வின்னர்
சன்பிளவர் ஆயில்    200 கிராம்    25    29
பட்டை                      10 கிராம்                      3    5
சோம்பு                       50 கிராம்                      6.50    10
மிளகாய்த்தூள்    100 கிராம்    25    32
மொத்தம்                                           491.50    597       
இதைத் தவிர பொருட்கள் போடுவதற்கான பை 3.60, வேலை செய்யும் ஊழியர்களுக்கு கூலி 4.90 என மொத்தம் 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Govt , Ration Stores, Grocery Stores, Government of Tamil Nadu
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...