புவனேஷ்வர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கட்டணங்களைக் குறைப்பது அல்லது ஒத்திவைப்பது குறித்து தனியார் கல்வி நிறுவனங்களிடம் பரிசீலிப்பதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. இது ஊரடங்கால் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
