×

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதி ரூ.45.86 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், டெல்லியில்  2012ல் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு நிர்பயா நிதியம் என்ற நிதியை உருவாக்கியது. மத்திய அரசு இதற்கு முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் தமிழக அரசு வெறும் ₹6 கோடியை மட்டுமே செலவு செய்துள்ளது.  தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை 151 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நிர்பயா நிதியை நூறு சதவீதம் பயன்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, அந்த தொகை எப்படி செலவிடப்பட்டுள்ளது. நிதியை ஏன் முழுமையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2018ல் ரூ.425.06 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் மாநில அரசுக்கு ரூ.353.69 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் இதுவரை ரூ.45.86 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை, சென்னை மாநகராட்சி, சமூக நலத்துறை, மாநகரப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் பல்வேறு திட்டங்களுக்கு நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்….

The post பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதி ரூ.45.86 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,iCord ,Chennai ,Chennai High Court ,Advoy A. GP ,Delhi ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...