×

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா? சைதை தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

சென்னை, ஏப்.9: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா என்பது குறித்து சைதாப்பேட்டை தொகுதியில் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தினார்.  கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள்முதல் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதைப்போல் திமுக எம்எல்ஏக்களும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.  மேலும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு, சுப்ரமணியர் கோயில் தெரு, பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் ‘’கொரோனா ஊரடங்கு’’ குறித்து மு.க.ஸ்டாலின், ஆய்வு செய்தார். அப்போது வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொaருட்க
ளான பால், மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா, அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார்.

அங்கிருந்த பொதுமக்களிடம், பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பொருட்களின் விலையேற்றம் குறித்தும் விசாரித்தறிந்தார்.  பின்னர், சுப்ரமணியர் கோயில் தெரு, பஜார் ரோடு பகுதியில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்களை, ‘டிசம்பர் 3 இயக்கத்தின்’ மூலம் அவர்களது வீடுகளில் வழங்கிட அதன் மாநில தலைவர் பேராசிரியர் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆய்வின் போது திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ உடனிருந்தார்.

Tags : Essential goods, Saidai module, MK Stalin in the social space
× RELATED சொல்லிட்டாங்க…