×

ஸ்விகி, ஸொமாட்டோ மூலம் சென்னையில் வீடுகளுக்கே சென்று காய்கறி, பழங்கள் டெலிவரி : தொலைபேசி, இணையம் மூலமாக ஆர்டர் செய்யலாம்


சென்னை : தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் மக்கள் காய்கறிகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில், மக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக, Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் மூலம், வீடுகளில் காய்கறிகள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின், செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக மக்கள் தொடர்ந்து சாலைகளில் சுற்றுவதால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. மக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து மக்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாக வீடுகளிலேயே டெலிவரி செய்ய ஸ்விகி, ஸொமாட்டோ மற்றும் டன்சோ ஆகிய மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி செயலர் தெரிவித்துள்ளார்.கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே, 16 வகை காய்கறி மற்றும் 5 வகை பழங்கள் கொண்ட தொகுப்பை, இந்த மூன்று நிறுவனங்கள் மூலம், விநியோகிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த சேவை மூலம், வீட்டில் இருந்தபடியே காய்கறி வாங்க விரும்புவோர், மதியம் ஒரு மணிக்கு முன்னர், சிஎம்டிஏ இணையதளம் வாயிலாகவோ அல்லது 90256-53376 மற்றும் 24791133 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Tags : Sweezy ,Somato , Squeegee, Somato, Chennai, Houses, Vegetables, Fruits, Delivery, Telephone, Internet, Order
× RELATED 2023ல் சொமேட்டோவில் அதிகம் ஆர்டர்...