×

கீழக்கரையில் கொரோனா பாதித்தவர் இறுதிச்சடங்கில் பங்கேற்றதால் தனிமைப்படுத்திக் கொண்ட மாஜி அமைச்சர்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த 69 வயது தொழிலதிபர், துபாய் சென்று விட்டு சென்னை வந்த நிலையில் கொரோனா அறிகுறிகள் இருந்ததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கீழக்கரையில் கடந்த 3ம் தேதி நடந்தது. இதற்கிடையே, இவர் கொரோனா பாதித்து உயிரிழந்ததாக கடந்த 6ம் தேதி பரிசோதனை முடிவுகள் வெளியாகின.
இவரது இறுதிச்சடங்கில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான மணிகண்டன், அவரது தந்தை முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் முருகேசன் ஆகியோரும் கட்சியினருடன் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இவர்களிடமும் கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதுகுறித்து மணிகண்டன் தரப்பிடம் விசாரித்தபோது, ‘‘இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள காரில் சென்றோம். குறுகிய பாதை என்பதால் கார் செல்ல முடியவில்லை. இதனால் முதியவரின் உறவினர்கள் சிலரை, சமூக இடைவெளி விட்டு நின்று, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்துவிட்டோம். இருந்த போதிலும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்’’ என்றனர்.

உடலை உடனே தர நெருக்கடியா?
கீழக்கரை:  கொரோனா பாதித்து இறந்த கீழக்கரை தொழிலதிபர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரது தந்தையுடன் மிக நெருக்கமான நட்பில் இருந்ததாக தெரிகிறது. இந்த நட்பின் அடிப்படையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் இறந்தபோது, சில மணிநேரங்களில் உடல் குடும்பத்தினரிடம் கிடைக்க முன்னாள் அமைச்சர் தரப்பு மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுவே தற்போது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Tags : minister ,Coroner ,funeral ,victim , Coroner's victim,bottom, funeral, minister of isolation, attended,funeral
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...