×

கோயம்பேடு மார்க்கெட்டின் 10 நுழைவாயில்களில் சுரங்கப்பாதை மூலம் கிருமி நாசினி தெளிப்பு: துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்

சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டின் 10 நுழைவு வாயில்களில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகிய அமைப்புகள் மூலம் செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர்  முருகேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் 10 நுழைவாயில்கள் 17 லட்சம் செலவில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் அமைக்கும் பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலர்  குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை செயற்பொறியாளர்கள் தினசரி  ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தவிர்த்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியுருப்புகளில் கிருமி நாசின தெளிக்க  பேரிடர் மேலாண்மைக்கான நிதியிலிருந்து 1.88 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்நிதி உதவியுடன் கொரோனா தடுப்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.



Tags : Deputy Chief Minister ,tunnel ,gates ,Coimbatore , Coimbatore Market, Subway, Disinfectant, Deputy Chief Minister OPS
× RELATED ஆந்திராவின் துணை முதலமைச்சராக...