×

கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், ஆண்டாள் அழகர் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம்....விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தை பயன்படுத்தி கொள்ள  தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் தமிழகத்திலும் கொடிய முறையில் பரவி வருகிறது.

இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் குணமடைந்துவருகின்றனர். ஏற்கனவே, டாட்டா நிறுவனம், விப்ரோ நிறுவனம்,  மகெந்திரா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, நடிகர் அக்‌ஷ்ய்குமார் ஆகியோர் பிரதமர் மோடி கேட்டுக்கொண்ட படி தாராளமான உதவி செய்துள்ளனர். மற்ற நடிகர்கள், நட்சத்திரங்கள் பலரும் உதவி செய்துவருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; கொரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக அலுவலகத்தையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களான உணவு, காய்கறி, உடை, மருந்து, முகக்கவசம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கும் தேவையான உதவியை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : Temutika Head Office ,Andalgaraj College ,Vijayakanth Announcement ,Alagar College ,Coronation Treatment Office , Coronal Therapy, Themidhika Head Office, Andal Beauty College, Vijayakanth
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக...