×

ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் அடங்கி தம்மையும் நாட்டையும் காக்க வேண்டும்: இளைஞர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை:  ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் அடங்கி தம்மையும், நாட்டையும் இளைஞர்கள் காக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் மிகக்குறைந்த தாக்குதலுக்கு ஆளானவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20 வயதுக்கும் கீழுள்ள பிரிவினர்தான். 21 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள னர்.தமிழகத்தில் நிலவும் சூழலை உணர்ந்தும், இளைஞர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்பதை அறிந்தும் இளைஞர்கள் இரு சக்கர ஊர்திகளில் சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் அடங்கி தம்மையும், நாட்டையும் இளைஞர்கள் காக்க வேண்டும்.

மோடி ஆலோசனை: பாமக இளைஞர் அணி தலைவர், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியிடம் பிரதமர் மோடி நேற்று மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவரது உடல் நலன் குறித்தும், பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலன் குறித்து விசாரித்தார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய பிரதமர் மோடி, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட அன்புமணி இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இந்தியா வலிமையான தலைமையின் கீழ் செயல்பட்டு வருவதை பிரதமரின் நடவடிக்கைகள் உணர்த்துவதாகவும் பாராட்டினார்.

Tags : home ,country , Respect, curfew, stay home, protect , country, Young people appeal
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு