×

வாகன சோதனையில் வாக்குவாதம் போலீஸ்காரர் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற தாய், மகன்

திருமலை: தெலங்கானாவில் வாகன சோதனையின்போது போலீஸ்காரரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற தாய், மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தெலங்கானா, மேட்சல் மாவட்டம்,  மல்காங்கிரி மவுலானாவில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் வழக்கம்போல் அந்த சோதனை சாவடியில் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த தாய், மகனை போலீசார் தடுத்து நிறுத்தி, ‘எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அப்போது பைக் ஓட்டி வந்த வாலிபர், பைக்கை நிறுத்திவிட்டு போலீசாரை வாய்க்கு வந்தபடி பேசி திடீரென போலீஸ்காரரின் கையில் இருந்த லத்தியை பறித்துக் கொண்டு அவரை தாக்க பாய்ந்தார். அந்த வாலிபரை அருகிலிருந்த போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.  இதில் ஆவேசம் அடைந்த  வாலிபரின் தாய், போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே கிடந்த கட்டையை எடுத்து தாக்க முயன்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சக போலீசார் அப்பெண்ணை தடுத்து, வாலிபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் உயரதிகாரிகள், போலீஸ்காரரை தாக்க முயன்ற தாய், மகன் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.



Tags : policeman ,vehicle test , Vehicle Testing, Argument, Policeman, Tried Mother, Son
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...