×

மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் கிடையாது: கடைக்காரர்கள் அறிவிப்பு : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஆட்களையும் நியமித்தனர்

சென்னை: மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படாது என்று சில கடைக்காரர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு நேரம் கட்டுப்பாட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டும் இயங்கும் என்று அறிவித்துள்ளது.

இந்த நேரத்தில் மக்கள் சமூக இடைவெளியை பயன்படுத்தி பொருட்களை வாங்கி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஒரு சிலர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், மாஸ்க் அணிந்து செல்லாமல் பொருட்களை வாங்கி செல்வது என்று தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் சில கடைக்காரர்கள் புதிய யுக்தியை கடைப்பிடிக்க கையாள தொடங்கியுள்ளனர். மளிகை, காய்கறி கடைகள் முன்பாக இடைவெளி விட்டு வட்டம் போடப்பட்டுள்ளது. அதில் நின்று ஒவ்ெவாருவராக பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதை கடைப்பிடிக்காதவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என்று கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தனியாக பணியாளர்களையும் நியமித்துள்ளனர்.  அது மட்டுமல்லாமல் மாஸ்க் அணியாமல் யார் வந்தாலும் காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கப்படாது. கடைகளுக்குள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர்.  இதனால் கடைகளுக்கு வருபவர்கள் மாஸ்க் அணிந்து வர தொடங்கியுள்ளனர்.


Tags : Vegans ,Vegetarians ,Shoppers , Mask team, vegetable, groceries, social space
× RELATED திருப்பதியில் எடை போடுவதில் முறைகேடு...