×

செங்கை, காஞ்சியில் இடமாற்றம் செய்த பிறகும் சமூக இடைவெளி இல்லாமல் செயல்படும் மார்க்கெட்டுகள்: நோய் தொற்று ஏற்படும் அபாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரில், பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உழவர் சந்தை மற்றும் தூய கொலம்பா பள்ளி ஆகிய பகுதகிளில் சமூக இடைவெளியில் காய்கறி கடைகள் அமைக்க கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.ஆனால், பள்ளி வளாகத்தில் மட்டும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், அருகில் உள்ள வேணுகோபால் கிளப்பில் காய்கறி கடை இயக்கப்படுகிறது. அங்கு கொரோனா பற்றி அச்சமில்லாமல் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு காய்கறி வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக,  வியாபாரிகளும், பொதுமக்களும், முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி விடாமல் உள்ளனர்.

அதேபோல், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் இட நெருக்கடியாக இருந்ததால், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதை தொடர்ந்து வையாவூர் சாலையில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இங்கு முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே காய்கறிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.பரந்து விரிந்த பகுதியில் கடைகள் இருந்தாலும், இங்கு வந்த பொதுமக்களில் பலர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒருவர் மீது ஒருவர் உரசியபடி நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனை தடுக்கவும், கண்காணிக்கவும் போலீசாரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Kanchi ,Chengi , Markets , social gap , transplantation,Chengi, Kanchi,infection
× RELATED கருடன் கருணை