×

வீட்டு வேலை செய்பவர்களால் கொரோனா வருமோ என்ற பீதி சொகுசாக இருந்த பெண்களை சமைக்க வைத்த கொரோனா

கொரோனாவால் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் மறைமுக நன்மைகளும் ஏற்பட்டு வருகின்றன. நாட்டில் மாசும், விபத்துகளும் குறைந்துள்ளன. அசுத்தமான கங்கை கூட குளிக்கும் அளவுக்கு சுத்தமாகி விட்டது. ஆளுக்கொரு பக்கம் வாழ்க்கையை ஓட்டி வந்த குடும்பங்களை ஒன்று சேர்த்துள்ளது. அதோடு சேர்த்து, வீட்டில் பணிப்பெண்களை வைத்துக் கொண்டு சொகுசாக காலம் தள்ளிய பெண்களை, இந்த கொரோனா சமைக்கவும், வீட்டை கூட்டவும் செய்ய வைத்துள்ளது. நாடு முழுவதும் நடந்துள்ள இந்த ‘நல்ல காரியம்’ ஆண்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களால், தனது வீட்டுக்குள் கொரோனா வந்து விடக்கூடாது என்ற உயிர் பயத்தில், 90 சதவீதம் வீடுகளில் அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று சம்பளத்துடன் அனுப்பி வைத்து விட்டனர்.

குறிப்பாக, சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில்  நடுத்தர வீடுகள் முதல் பங்களாவாசிகள் வரை இது நடந்துள்ளது. அதேபோல், இதற்கு நேர்மாறாக முதலாளி அம்மா குடும்பத்தால் தங்களுக்கு கொரோனா வந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்களும் வேலையில் இருந்து நின்றுள்ளனர்.
 கடந்த வாரம் மும்பையில் உள்ள வீடு ஒன்றில் வேலை செய்து வந்த 65 வயது பெண்ணுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த அந்த வீட்டின் உரிமையாளரின் பாதிப்பு அவருக்கு பரவியது. இதைத் தொடர்ந்து பணிப்பெண்ணை வீட்டு வேலை செய்ய வீட்டு உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வீட்டு பெண்களே வீடு பெருக்குவது, பாத்திரங்கள் தேய்ப்பது, சமையல் செய்யும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள கலினா பகுதியில் வசிக்கும் ருஷினா மன்சூரி என்ற வீட்டு வேலை செய்யும் பெண் கூறுகையில், ‘‘நான் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் எனக்கும் அந்த வைரஸ் பரவும் ஆபத்து இருந்தது. இதனால், வேலையில் இருந்து நின்று விட்டேன்.’’ என்றார்.



Tags : Corona ,women ,housewives , Corona, women, corona virus
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ