×

ஊரடங்கு நேரத்தில் நடைபயிற்சி போக முடியாதவர்கள் என்ன செய்யலாம்? யோகா மருத்துவர் தீபா தகவல்

சென்னை: ஊரடங்கு நேரத்தில் நடைபயிற்சி போக முடியாதவர்கள் என்ன செய்யலாம், என்ன வகையான உணவு உட்கொள்ள வேண்டும் என்று அரசு யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் தீபா விளக்கம் அளித்துள்ளார்.

* கொரோனா வைரஸ் தொற்று வராமல் இருக்க என்ன மாதிரி உணவு உட்கொள்ளலாம்?
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் வைட்டமின் சி எந்தெந்த உணவுகளில் அதிகமாக உள்ளதோ அந்த உணவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மேலும் உடலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கொரோனாவை உணவு மூலம் தடுக்க முடியுமா என்றால் இல்லை. அதுவராமல் தடுக்க என்ன மாதிரியான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் இஞ்சி சமையல்களில் அதிகமாக சேர்க்க வேண்டும். அதாவது இதில் சிஞ்சிரோல் என்ற வேதிப்பொருட்கள் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும்.

அதேபோன்று மஞ்சள். இதில் குர்கூனைன் என்ற வேதிப்பொருட்கள் இருப்பதால் மனிதனுடைய உடலில் டி செல்ஸ் அதிகமாக உற்பத்தி செய்வதால் உடலில் எந்தவிதமான கிருமி, வைரஸ் சென்றால் அதை எதிர்த்து போராடக் கூடியது. இது மஞ்சளில் அதிகம் உள்ளது. ஆரஞ்சு வைட்டமின் சி அதிகம் உள்ள உணவு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மிகச்சிறந்த உணவு. நிறைய பேருக்கு பயத்திலே சளி, இருமல், தும்மல் போன்றவை சாதாரணமாக வந்தால் கூட கொரோனா வந்திருக்குமோ என்ற பயம் வருகிறது. கொரோனாவால் நமக்கு சுவாச பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால் கண்டிப்பாக காய்ச்சல் இருக்கும். தொண்டையில் வலி ஏற்பட்டு உணவுகளை விழுங்குவதில் பிரச்னை ஏற்படும். தினமும் தண்ணீர் 2 லிட்டருக்கு மேல் குடிக்க வேண்டும்.

தக்காளியில் வைட்டமின் சி அதிகம். இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய அளவிற்கு சக்தி இருக்கிறது. தக்காளி எந்த அளவிற்கு சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பசளக்கீரை, ஜீரண சக்தி அதிகரிக்க, வயிறு உபாதைக்கு சிறந்தது. இதில் அதிக நார்சத்து, வைட்டமின் சி உள்ளது. பூண்டு அனைத்து வகையான நோய்களுக்கும் மருந்தாகும். சளி தொந்தரவுக்கு மிகச்சிறந்த நிவாரணம். பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக ஆப்பிள் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. ெகாரோனா வைரசில் இறப்பு என்பது ஏற்கனவே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், சுவாச கோளாறு போன்றவை இருப்பவர்களுக்கு தான் வருகிறது.

 அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில்தான் இறப்பு ஏற்படுகிறது. எனவே அவர்கள் ஆப்பிள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பாதாம், முந்திரி, வேர்க்கடலை, தேன் போன்றவை சாப்பிடுவது நல்லது. இந்த சமயங்களில் சமையலில் பட்டை, இலவங்கம், அன்னாசிப்பூ, சோம்பு போன்றவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

* வீட்டில் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் இருக்கும் போது நெல்லிக்காய் சாறு, துளசி 50 மிலி, இஞ்சி 10 மி.லி, எலுமிச்சை சாறு 5 மி.லி, மஞ்சள் 1/4 ஸ்பூன் போன்றவை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். ெபரியவர்கள் 200 மிலி, சிறியவர்கள் 100 மி.லி சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்திற்கு பின் சாப்பிட வேண்டும்.

* ஊரடங்கு நேரத்தில் நடைபயிற்சி போக முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வெளியில் போகவில்லை என்றால் அலர்ஜி வருவதில்லை. இதனால் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கற்பூரவள்ளி சாறு, சீரகம், மிளகு போன்றவை சேர்த்து நன்றாக ெகாதிக்க வைத்து குடிக்க வேண்டும். தவிர தாடாசனம், பாதகஸ்தாசனம், அர்பசக்கராசனம், ேஹாமூகாசனம், புஜங்காசனம், சேதுபந்தாசனம் போன்ற ஆசனங்கள், மூச்சு பயிற்சியில் நாடி சுதிபிரணயாமம், கபாலபதி போன்றவை வீட்டில் இருந்தபடி செய்யலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சுரைக்காய் ஜூஸ், பீட்ரூட், பூண்டு போன்றவை அதிகம் சேர்க்க வேண்டும்.

உப்பு, எண்ணெய் போன்றவை குறைவாக சேர்க்க வேண்டும், ஊறுகாய் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆசனங்கள் பத்மாசனம், வஜ்ராசனம், சேதுபந்தாசனம், நாடிசுதி பிரணாயாமம் போன்றவை செய்யலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காய், கோவைக்காய், வெள்ளரிக்காய் போன்றவை சமையலில் சேர்த்து சாப்பிட வேண்டும். புஜங்காசனம், பத்மாசனம், நாடிசுதிபிரணாயாமம் போன்றவை செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவ உணவு அட்டவணை

* தூங்கி எழுந்தவுடன் (5.30 மணி)- குறைந்தபட்சம் இரண்டு டம்ளர் நீர் அருந்தவும் (500மிலி)

* தினமும் குறைந்தது ஒரு மணி நேர யோகா பயிற்சி. எதை நாம் உண்கிறோமோ அதுவேவாகிறோம். அமைதி மற்றும் சந்தோசம் நிறைந்த மனநிலையில் உண்ணுதல் நலம். தினமும் சூரிய ஒளி நம் உடலில் 15-30 நிமிடங்களாவது பட வேண்டும். அன்றாடம் ஒரு வேளையாவது பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் உண்ணுதல் நலம். வாரத்தில் ஒருநாள் பழச்சாறு அல்லது உண்ணா நோன்பு இருத்தல் நன்மை தரும்.

* சமைத்த உணவு
முற்பகல் (9-10 மணி): 1 1/2 கப் சாதம் ( கைகுத்தல் (அ) புழுங்கல் அரிசி சாதம்/ காய்கறி புலாவ் (300 கிராம்), 2 கப் வேக வைத்த காய்கறிகள் (அ) காய்கறி கூட்டு (400 கிராம்) 1 கப் சாம்பார்+ 1கப் ரசம், 1 டம்ளர் நீர் மோர் (இஞ்சி, புதினா, கொத்தமல்லி இலை, கருவேப்பிலை, பெருங்காயம், உப்பு இன்றி) (100 மிலி). மதியம்: (1-2 மணி) : பருவத்தில் விளைந்த இரு பழவகைகள் (150-200 கிராம்) இரவு: (6-7 மணி) : 3 தோசை ( சிறுதானியங்கள்/ முளை கட்டிய பச்சை பயறு)/ ( சிறுதானியம் / காய்கறி/ இட்லி/ வரகு/ திணை/ குதிரைவாலி பொங்கல் (300 கிராம்) , சட்னி (50கிராம்) - நிலக்கடலை/ வெங்காயம்/ எள்ளு/ தேங்காய் சட்னி உறக்கம்: இரவு 9.30 மணி

* இயற்கை உணவு
முளைகட்டிய தானியங்கள் (100கி) (அ) ஊற வைத்த கொட்டை வகைகள் ( நிலக்கடலை, பாதாம்) (25 கிராம்). பழவகைகள் (200கிராம் 2) / காய்கறி பசுங்கலவை (300கிராம்) அல்லது பருவத்தில் விளைந்த இரு பழவகைகள் (100கிராம்) இது ஒரு மாதிரி உணவு அட்டவணை மட்டுமே உணவு அட்டவணை நோயாளி(அ) தனிநபரின் தேவை பொருத்து வேறுபடும். தினமும் குறைந்தது 3-4 லிட்டர்( அவ்வப்போது ) நீர் அருந்தவும்.மேலும் அருகிலுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவரை அணுகவும்.



Tags : Yoga Physician ,curfew , Curfew, walking, yoga doctor Deepa
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்