×

முதல்வரிடம் நேரடியாக மனு கொடுத்ததாக கூறி கலைஞரின் பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக பாண்டியன், கணேசன், வினோத் ஆகியோர் இருந்தனர். கலைஞரின் மறைவுக்கு பிறகு அவர்கள் தமிழக காவல்துறையில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு மாற்றப்பட்டனர். அதில், பாண்டியன் ஏற்கனவே ஓய்வு பெற்றார். அவர் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், மற்றொரு பாதுகாப்பு அதிகாரியான கணேசன், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கலைஞர் மறைவுக்குப் பிறகு கணேசன், தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு மாற்றப்பட்டார். கலைஞர் முதல்வராக இருந்தபோது, அவரிடம் கணேசன் அரசு நிலம் ஒதுக்கும்படி விண்ணப்பம் செய்தார். முதல்வரிடம் நேரடியாக மனு அளிக்கக் கூடாது. போலீஸ் துறையில் விண்ணப்பம் கொடுத்து டிஜிபி மூலம்தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விதியை மீறியதால் சஸ்பெண்ட் செய்வதாக தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரிடம் காவலர்கள் மனு கொடுப்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன.

ஏன், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காவலர்கள் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம் நடத்தினார். இதற்காக அப்போது விதிமுறையில் தளர்வு செய்யப்பட்டது. தற்போது பழைய விதிமுறைப்படி கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான். மேலும் வினோத்துடன் பணியாற்றும் பலரும் டிஎஸ்பிக்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவருக்கு பதவி உயர்வு வழங்காமல், இன்ஸ்பெக்டராகவே தொடர்ந்து நீடித்து வருகிறார்’’ என்றனர்.

Tags : Artist ,security officer ,CM CM , Chief, kalaignar Security Officer, Suspend
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...