×

8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் சிபிஎஸ்இ.யும் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பை தொடர்ந்து, ஒன்று முதல் 8ம் வரை அனைத்து மாணவ, மாணவிகளும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒன்று முதல் 8ம் வரையிலான மாணவர்களுக்கு இனிமேல்தான் தேர்வு நடத்தப்பட இருந்தது. முன்னதாக, தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு நடந்து முடிந்துள்ளது. 10ம் வகுப்புக்கு இன்னும் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வு நடத்தப்படாமலேயே ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இதேபோல், பல்வேறு மாநில அரசுகளும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ தரப்பில் இருந்து இதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. அதனால், இந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமோ என்று சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ.யும் 1 முதல் 8ம் வரை அனைத்து மாணவ, மாணவிகளும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
ஆனால், 9 மற்றும் 11ம் வகுப்பில் பயின்ற மாணவ, மாணவிகள், அவர்களின் பள்ளி தேர்வுகள், பருவ தேர்வுகள் அடிப்படையில் பாஸ் செய்யப்படுவார்கள் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கூறிய தகவல்படி, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் யாராவது தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags : Class ,Class All-Pass CBSE Announcement , Up to 8th grade, All Pass, CBSE
× RELATED இறுதியாண்டு தேர்வு நிறைவு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை