×

சுகாதாரம், மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க நிதியுதவி: பிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ லிமிடெட் ரூ.1125 கோடி நன்கொடை

டெல்லி: சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 202 நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர். 1547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 124 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில்,குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த நிதி தற்போதைய துன்பகரமான சூழலை சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளை சமாளிக்கவும் உதவும்,’ என கூறியுள்ளார். அதனை போல், மாநில அரசுகளும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி பொருள் உதவி அளிக்க வேண்கோள் விடுத்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அறக்கட்டளைகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES  நிதியத்திற்கும் அந்தந்த மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில்,

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் விப்ரோ நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்துள்ளது. விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1125 கோடி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பினால் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Wipro Ltd ,Relief Fund Wipro Ltd ,crisis , Wipro Ltd donates Rs125 crores to Prime Minister's Relief Fund to fund health and humanitarian crisis
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...