×

கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணிகள் திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏவுடன் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் பேச்சு: தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்று வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணிகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏவுடன் மு.க.ஸ்டாலின் செல்போன் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்று வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா நோய்ப் பரவலின் நிலை மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து, திமுக மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்போன் வீடியோ கால் உரையாடி கேட்டறிந்தார். கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.  செல்போன் வீடியோ கால் உரையாடல் வருமாறு:

மு.க.ஸ்டாலின்: தூய்மை பணியாளர்களுக்கு நம்ம ஏதாவது பண்ணிட்டு இருக்கோமோ.
மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ(சைதாப்பேட்டை): தூய்மை பணியாளர்களுக்கு நல்லா உதவி பண்ணிட்டு இருக்கோம்.
மு.க.ஸ்டாலின்: சரி...
மா.சுப்பிரமணியன்: மாஸ்க், கையுறை, கிருமி நாசினி எல்லாம் வாங்கி கொடுத்து கொண்டிருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின்: ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளுங்கள்...
மு.க.ஸ்டாலின்: கேரளா பார்டர் என்பதால் உங்கள் ஏரியாவில் கொரோனோ தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எல்லாரும் சந்தேகப்படுகிறார்களே?.
ஆஸ்டின் எம்எல்ஏ(கன்னியாகுமரி): இங்கு சுமார் 5000 பேர் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின்: டெஸ்ட் ஏதாவது பண்ணியிருக்காங்களா?
ஆஸ்டின்: யாருக்குமே டெஸ்ட் பண்ணவில்லை.
மு.க.ஸ்டாலின்: டெஸ்ட் பண்ணுனால் தான உண்மை நிலவரம் தெரியவரும். மக்கள் நடமாட்டம் போக்குவரத்து எல்லாம் எப்படி இருக்கிறது.
ஆஸ்டின்: 2 நாட்களாக மக்கள் நடமாட்டம் கூடுதலாக இருந்தது. இப்போது பரவாயில்லை.
மு.க.ஸ்டாலின்: கேர்புல்லா இருங்க...
மு.க.ஸ்டாலின்: வீடு, வீடாக செக்கப் பண்ணப்போறோம் என்று சொன்னார்களே. அப்படி எதுவும் பண்ணினாங்களா?.
பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ (துறைமுகம்): அப்படி எதுவும் பண்ணமாதிரி தெரியவில்லை. மீடியா கவரேஜ்க்காக ஒரு சில இடத்தில் பண்ணிட்டு போறாங்க. பெரும்பாலும் பண்ணவில்லை.
மு.க.ஸ்டாலின்: பார்த்து கொள்ளலாம். கேர்புல்லா இருங்க . கொரோனா உங்க ஏரியாவில் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு.
மூர்த்தி எம்எல்ஏ(பரமத்தி வேலூர்): எங்க மாவட்டத்தில் ஒரு கொரோனா கூட வரலில்லை அண்ணா.
மு.க.ஸ்டாலின்: ஆஸ்பத்திரியில் டவுட் கேஸ் எதுவும் இருக்கிறதா?
மூர்த்தி: அப்படி எதுவும் இல்லை.
மு.க.ஸ்டாலின்: ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
மு.க.ஸ்டாலின்: மற்ற மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்தாங்களே? அவங்க எந்த ஏரியாவில் இருக்காங்க. உங்களுக்கு ஏதாவது தகவல் இருக்கா?
கார்த்திக் எம்எல்ஏ(சிங்காநல்லூர்): சுந்தராபுரத்தில் இருக்கிறார்கள். அவுட்டரில் சூலூர் தொகுதியில் இருக்காங்க.
மு.க.ஸ்டாலின்: பிரதமர், அவங்களுக்கு மாநில அரசு சாப்பாடு எல்லாம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. தங்க வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. ஏதாவது கொடுத்து இருக்காங்களா?. அப்படி இல்லை என்றால் நம்ம ஏதாவது பார்த்து பண்ண வேண்டும்.
கார்த்திக்: பார்த்து கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின்: நல்லா இருக்கீங்களா?
பார்த்திபன் எம்பி (சேலம்): நல்லா இருக்கேண்ணா?
மு.க.ஸ்டாலின்: கொரோனாவால் ஆஸ்பத்திரியில் எத்தனை பேர் அட்மிட் ஆகியிருக்காங்க?
பார்த்தீபன்: கிட்டத்தட்ட 70,000 வீடுகளில் டாக்டர்கள், செவிலியர்களை வைத்து செக் பண்ணினேன். அதில் 25 பேருக்கு சளி, காய்ச்சல் அதிமாக இருந்தது. அவர்களை கூப்பிட்டு போய் ஆஸ்பத்திரியில் தனி வார்டில் வைத்திருக்கிறார்கள். கலெக்டர் கிட்டேயும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிக்கிட்டு இருக்கேன்.
மு.க.ஸ்டாலின்: தொடர்ந்து தொடர்பில் வைத்து கொள்ளுங்கள்.
மு.க.ஸ்டாலின்: எப்படி போய்ட்டு இருக்கு எல்லாம்.
செந்தில்குமார் எம்எல்ஏ(பழனி): பரவாயில்லை. நம்ம யூனியன் சேர்மன் எல்லாரும் அந்தந்த பகுதியில் மாஸ்க் எல்லாம் கொடுக்க சொல்லியிருக்கேன். கிராமத்திற்கு எல்லாம் டேங்க் மூலமாக கிருமி நாசினி அடிக்கிறார்கள். முடிந்த அளவுக்கு போக கூடிய இடத்திற்கு சென்று பாருங்கள் என்று சேர்மன் துணை சேர்மன், கவுன்சிலருக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். நீங்க சொன்னீங்க என்றால் அடுத்த கட்டத்துக்கு எப்படி போணுமே அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின்: ஓகே... ஜாக்கிரதையாக, கேர்புல்லா இருங்க.

இதே போல ஒவ்வொரு மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏவுடன் வீடியோ கால் மூலமாக பேசினார். இது குறித்து தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், “கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம். மக்கள் செயலாளர்களாக செயல்பட மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை கூறினேன். கொரோனா காலத்தில் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்தேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. இந்த நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : District Secretary ,DMK ,Corona Prevention Awareness Talks ,MLA ,Video Call , Corona Prevention,Awareness Speech ,DMK District Secretary, MP, MLA
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு