×

திருப்பூரில் தயாரான 1.50 லட்சம் முக கவசங்கள் அனுப்பிவைப்பு

திருப்பூர்:  திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தயாரித்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் முக கவசங்களை மாவட்ட நிர்வாகம் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களுக்கு பரவாமல் தற்காத்துக்கொள்ள முககவசங்கள் அணிந்து வருகின்றனர். இதனால், முககவசங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முக கவசம் தயாரிக்க விருப்பமுள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க அறிவுறுத்தினார்.

 இதற்காக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஒரு சில பின்னலாடை உற்பத்தியாளர்கள் முக கவசம் தயாரிக்க சம்மதம் தெரிவித்து கடந்த ஒருவாரமாக முக கவசங்களை தயாரித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
  முக கவசங்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. முதல் கட்டமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் முககவசங்கள் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு திருப்பூரிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Facial Shields ,Tirupur , Distribution,1.50 Lakh Facial Shields, Tirupur
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...