×

வைரஸ் பாதிப்பில் இருந்து மீள கொரோனா பயத்தை போக்க வேண்டும்: திவ்யா சத்யராஜ் பேட்டி

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள பயத்தை போக்க வேண்டும் என்று, நடிகர் சத்யராஜ் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கூறினார். அது வருமாறு: நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்றால், முதலில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு அதிக ஆரோக்கியத்தை தருவது, அவரது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கும். வைட்டமின் தெரபி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். வைட்டமின் சி, மல்டி வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து 30 நாட்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

வைட்டமின் சி மாத்திரைகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் அல்லது குறைந்த விலையில் கிடைக்க வழி செய்ய வேண்டும். கொரோனா பற்றிய செய்திகளை 24 மணி நேரமும் பார்க்கக்கூடாது.  எதற்கும் பயப்பட வேண்டாம். வீட்டில் தனித்து இருத்தல் நம் பாதுகாப்பை உறுதி செய்யும். கொரோனாவை விரட்ட அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊரடங்கு வேளையில் கிடைத்த ஓய்வு நேரத்தை புதிய விஷயங்கள் கற்றுக்கொள்ள பயன்படுத்த வேண்டும்.

Tags : Corona , Corona ,dhivya sathyaraj
× RELATED கொரோனா அச்சம் உள்ள சூழலில் நீட் தேர்வை...