×

20 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்

பெரம்பூர்: அயனாவரம், வீராசாமி 2வது தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரதீப் (29) என்பவருக்கும், நங்கநல்லூரை சேர்ந்த திவ்யா (24) என்பவருக்கும் நிச்சயித்தபடி, வேப்பேரியில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், திருமணத்தை வீட்டிலேயே எளிமையான முறையில் நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி உள்ளூர் போலீசார் அனுமதி பெற்று பெண் வீட்டில் திருமணம் நடந்தது. இதில், பெண் வீட்டார் தரப்பில் 10 பேரும், மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் 10 பேரும் என 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

Tags : Married, corona virus
× RELATED மகன் திருமணத்தில் மயங்கி விழுந்தார்...