×

கொரோனா தடுப்பு பணிக்காக வில்லிவாக்கம் எம்எல்ஏ 25 லட்சம் நிதி ஒதுக்கீடு

அண்ணாநகர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்ள தேவையான  செயற்கை சுவாச கருவிகள், முகக்கவசம், கையுறை, சோப்பு, கிருமிநாசினிகள் மற்றும் தேவையான பொருட்கள் அரசு மருத்துவமனைகளில் வழங்கும் வகையில், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹25 லட்சத்தை எம்எல்ஏ ப.ரங்கநாதன்  ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும், வில்லிவாக்கம் 94வது வார்டுக்கு உட்பட்ட துப்புரவு ஊழியர் மற்றும் சுகாதார ஆய்வாளர் என சுமார் 500 பேருக்கு முகக்கவசம், கையுறை, சோப்புகள் வழங்கினார். தொடர்ந்த, சென்னை  ராஜமங்கலத்தில் உள்ள சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து முகக்கவசங்கள், கிருமிநாசினி, கையுறை  ஆகியவற்றை வழங்கினார்.

Tags : VILLAVIATION MLA , Corona, Willingham MLA, Funding, Corona Virus
× RELATED சென்னையில் 10.18 லட்சம் லிட்டர் கிருமி...