×

சென்னை புறநகர் பகுதிகளில் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை

பூந்தமல்லி: தமிழகத்தில் நிலவி வரும் ஊரடங்கு தடை உத்தரவை பயன்படுத்தி, சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி, மளிகை, பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. ஒருசில பேராசை பிடித்த வியாபாரிகள், ஊரடங்கு தடையை பயன்படுத்தி காய்கறி, பால் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை அநியாய விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், மக்களின் அன்றாட, அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து, அவற்றை பலமடங்கு விலைகளில் ஒருசிலர் விற்கின்றனர். குறிப்பாக, மற்ற கடைகளில் தக்காளி, வெங்காயம் போன்றவை ஒரு கிலோ ₹35 வரை விற்கும்போது, இதுபோன்ற பேராசை பிடித்த வியாபாரிகள் அவற்றை ₹80க்கு விற்கின்றனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் காய்கறி, மளிகை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை இதுபோன்ற வியாபாரிகளின் நடவடிக்கையால் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவர்கள்மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் வியாபாரிகள் சங்கத்தினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Chennai ,suburbs , Chennai, Sale of Vegetables
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்