×

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமான நடிகர் சேதுராமன் திடீர் மரணம்

சென்னை :  சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் வசித்து வந்தவர் டாக்டர் சேதுராமன் (37). இவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் கதாநாயகனாக  அறிமுகம் ஆனார். மேலும் பல படங்களில் சந்தானத்துடன் இணைந்து நடித்தார். தற்போது 50 - 50 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தன் வீட்டில் இருந்த சேதுராமனுக்கு திடீர் மாரடைப்பு  ஏற்பட்டது.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணிக்கு மரணம் அடைந்தார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவரது மரணம் தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Tags : Actor , Sethuraman Sudden,Death , Actor
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...