×

கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்தில் 4 தனி மருத்துவமனைகள் : தாம்பரம் சானிடோரியம், மதுரை தோப்பூர் உள்ளிட்ட இடங்களில் அமைகிறது

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தர தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 10 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது. இதனிடையே தமிழகத்தில் 23 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், முதல் பலியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது  கொரோனா பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்க நாலு மருத்துவமனைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளது. தாம்பரம் சானிடோரியம், மதுரை தோப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனாவுக்கு மருத்துமனை அமைகிறது. கொரனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை தனிமையாக வைக்க அனைத்து மருத்துவமனைகளிலும் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனி மருத்துவமனைகள் நான்கு இடங்களில் அமைய உள்ளது.

Tags : hospitals ,Madurai Toppur ,Tamil Nadu ,Tambaram Sanitarium ,Corona , 4 separate hospitals in Tamil Nadu to address Corona: Tambaram Sanitarium, Madurai Toppur
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...