×

ஊடரங்கு அமலில் உள்ள நிலையில் Swiggy, Zomato நிறுவனங்கள் உணவு விநியோகம் செய்ய அனுமதி: பாதுகாப்பு விதிகளை மீறினால் தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா 4,22,566-க்கும்  மேற்பட்டவர்கள் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஆட்டி வருகிறது. இந்தியளவில் கொரோனா வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். அன்றைய நாள், நாடு முழுவதும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில்   போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, சட்டப்பேரவையில்,  110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அதிமுக அரசு, தொடர்ந்து  தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  இன்று(நேற்று) மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை144 தடை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். மாவட்ட எல்லைகள் மூடப்படும். மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். வெளியே வரும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனால், தினக் கூலிகள்,  விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க அதிமுக அரசு முடிவு செய்து, ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்படும். அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000  நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என்றார்.

அம்மா உணவகங்கள் வழங்கபோல் செயல்படும். பொதுமக்கள் நலன் கருதி உணவகங்கள் இயங்கும் ஆனால், பொதுமக்கள் உணவகத்தில் இருந்து சாப்பிட அனுமதியில்லை.  பார்ச்சல் செய்து கொடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆன்லைன் உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுள்ள Swiggy, Zomato நிறுவனங்கள் செயல்பட  சென்னை மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். உரிய பாதுகாப்புடன் உணவு விநியோக சேவை நிறுவனங்கள் செயல்பட வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் Swiggy, Zomato நிறுவனம் செயல் பட தடைவிதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தனியார் நிறுவனங்களோ , சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்க மாநகராட்சி ஆணையர் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : companies ,Chennai Corporation ,Zomato Companies , Allow Swiggy and Zomato companies to distribute food while in operation: Chennai Corporation
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...