×

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல், மகனாகவும் நினைத்துப் போற்றிய, திருநெல்வேலி சீமை தந்த தீரம் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவன். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முழுவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.
* பணிக் காலத்தில் பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவி ₹50 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக 1.8.2018 அன்று முதல் உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டேன். இம்மருத்துவ நிதி உதவி ₹2 லட்சமாக தற்போது உயர்த்தி வழங்கப்படும்.
 * ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வான்வழி அவசர கால சேவை ₹10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
* நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடையவும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்
படும்.
* ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும், உண்டி உறைவிட பள்ளிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்கள் உணவுத் தொகை ₹900லிருந்து ₹1,000 ஆகவும், கல்லூரி மாணவர்கள் உணவுத் தொகை ₹1,000லிருந்து ₹1,100 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* ஜெயலலிதாவை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்திற்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிட்டு, அவ்வளாகத்தில் அவரது உருவச் சிலை அமைக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : district ,Mayiladuthurai ,Tamil Nadu , Mayiladuthurai district , become ,38th district, Tamil Nadu
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...